No results found

    செல்ல நாய்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்!!!


    வீட்டில் செல்லமாக நாய் வளர்த்தால், அந்த செல்ல நாய் சில நாட்களில் நம்முடன் ஒரு குடும்பத்தவரைப் போல் மிகுந்த பாசத்தை வைத்து விடுவதோடு, அதன் மீது நாமும் மிகுந்த அன்பை வைத்துவிடுவோம். பின் அவற்றை எந்த நேரமும் ஒரு குழந்தை போல் மிகவும் பாதுகாப்பாக வளர்த்து வருவோம். அவ்வாறு அவற்றை சரியாக பராமரிக்கும் போது, அவை எப்போதும் நம் பின்னாடியே சுற்றிக் கொண்டு இருக்கும். அதிலும் அவை நம் மீது அளவுக்கு அதிகமாக அன்பை வைத்துவிட்டால், நாம் வெளியே சென்று வீட்டிற்கு செல்லும் போது, மிகுந்த உற்சாகத்துடன் நமக்காக காத்து கொண்டிருக்கும்.

    அத்தகைய நமது வீட்டு செல்லப்பிராணி நம்முள் ஒருவராக மாறும் போது, நாம் என்னவெல்லாம் சாப்பிடுகிறோமோ, அவை அனைத்தையும் அவற்றிற்கும் கொடுப்போம். ஆனால் அவ்வாறு அவற்றிற்கு நாம் சாப்பிடும் அனைத்தையும் கொடுக்கக் கூடாது. ஏனெனில் நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் சில நாய்களின் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    ஆகவே அத்தகைய உணவுப் பொருட்கள் என்னவென்று தெரிந்து கொண்டு, அந்த உணவுப் பொருட்களை நமது வீட்டு செல்ல நாய்களுக்கு கொடுக்காமல், அதன் ஆரோக்கியத்தை நீட்டிக்கும் உணவுப் பொருட்களை மட்டும் கொடுப்போம். இப்போது நாய்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

    அவோகேடோ

    மனிதர்களுக்கு மிகவும் சிறந்த உணவான அவோகேடோ, நாய்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் இதில் உள்ள பெர்சின் என்னும் பொருள் நாய்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆகவே அந்த பழத்தை நாய்களுக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது.

    சாக்லேட், காபி மற்றும் டீ

    காப்பைன் உள்ள பொருட்களான சாக்லேட், காபி மற்றும் டீ போன்றவை நாய்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதிலும் இந்த உணவுப் பொருளில் புரோமின் என்றும் பொருள் உள்ளது. இது நாய்களின் இதயம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதனை சாப்பிட்டால், அவற்றிற்கு சோர்வு, வாந்தி மற்றும் சிலசமயங்களில் இரத்தப்போக்கு போன்றவையும் ஏற்படும்.

    காளான்

    வீட்டில் சிலசமயங்களில் காளானை சமைத்து சாப்பிடுவோம். அதிலும் காளானை அசைவ உணவுகளோடு சமைப்போம். அப்போது அந்த உணவுகளை நாய்களுக்கு கொடுக்க வேண்டாம். ஏனெனில் அதனை நாய்கள் சாப்பிட்டால், உடலில் பல தொற்றுநோய்கள் அவற்றிற்கு ஏற்படும். சில நேரங்களில் அந்த உணவுகள் நாய்களின் உயிருக்கு கூட ஆபத்தை விளைவிக்கும்.

    வெங்காயம் மற்றும் பூண்டு

    வெங்காயம் மற்றும் பூண்டு மனிதர்களுக்கு சிறந்ததாக இருக்கலாம் ஆனால் அவற்றை நாய்கள் சாப்பிட்டால், அவற்றின் உடலில் உள்ள சிவப்பணுக்கள் அழிந்துவிட்டு, அனீமியா நோயை உண்டாக்கும். அதற்காக இதனை கொடுக்கவ கூடாது என்பதில்லை, ஆனால் மிகவும் குறைந்த அளவில் கொடுப்பது தான் நல்லது.

    திராட்சை அல்லது உலர் திராட்சை

    நாய்களை மிகவும் பிடிக்கும் என்றால், அவற்றிற்கு திராட்சை அல்லது உலர் திராட்சைகளை கொடுக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் இவற்றை சாப்பிட்டால், நாய்களுக்கு சிறுநீரகம் பாதிக்கப்படும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

    வேக வைக்காத அசைவ உணவுகள்

    அசைவ உணவுகளை வேக வைக்காமல் கொடுத்தால், அதில் உள்ள பாக்டீரியா, நாய்களுக்கு ஃபுட் பாய்சனை ஏற்படுத்தும். ஆகவே அவற்றிற்கு இந்த உணவுகளை வேக வைத்து, பின்னர் கொடுக்க வேண்டும்.

    உப்பு

    நாய்களுக்கு அதிக அளவில் உப்பு இருக்கும் உணவுகளை கொடுக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அவை நாய்களின் உடலில் வறட்சியை ஏற்படுத்தும். மேலும் அதிக உப்புள்ள உணவுகள் உடல் வெப்பநிலையை உயர்த்தி, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

    Previous Next

    نموذج الاتصال