No results found

    மண்புழு கொடுங்க : மீனுக்கு ஏற்ற டேஸ்டி ஃபுட்


    மீன் வளர்ப்பது மனதிற்கு அமைதியையும், ஆனந்தத்தையும் தரும். மீனுக்கு ஏற்ற உணவுகளைக் கொடுத்தால்தான் அவைகள் தொட்டியில் வளர்ந்தாலும் அபாரமாய் வளர்ச்சி அடையும். மீனுக்கு ஏற்ற ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தெரிவிக்கின்றனர் கடல்வாழ் உயிரின ஆய்வாளர்கள்.

    மண்புழு மசாலா

    மண்புழு என்றால் மீன்களுக்கு கொள்ளைப் பிரியம். மார்க்கெட்டில் போய் மண்புழு வாங்கி வந்து போடலாம். வீட்டின் கொல்லைப் புறத்திலேயே கூட மண்புழு வளர்க்கலாம்.

    லெட்டூஸ்

    லெட்டூஸ் இலை மீன்களுக்கு சிறந்த சாப்பாடு. மொத்தமாய் வாங்கி வந்து நறுக்கி போடலாம். இதில் ஊட்டச்சத்துக்கள் மீன்களுக்கு ஏற்றவை. சில மீன்களுக்கு லெட்டூஸ் அலர்ஜி ஏற்படுத்திவிடும். அப்பொழுது லெட்டூஸ் கொடுப்பதை நிறுத்திவிடலாம். லெட்டூஸை வேகவைத்தும் கொடுக்கலாம்.

    சமைத்த அரிசி

    அரிசியை வேக வைத்து சாதமாக வடித்து மீன்களுக்கு கொடுக்கலாம். மீன்கள் அவற்றை விரும்பி உண்ணும். அதேபோல் பொரி உணவும் கொடுக்கலாம். இப்பொழுதெல்லாம் சில மீன்கள் பாஸ்தா கூட சாப்பிடுகின்றன. எனவே இவற்றை வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம்.

    முளை கட்டிய பயறு

    பாசிபயறு, கொண்டைக்கடலை போன்ற பயறு வகைகளை முளைகட்டி வைத்து மீன்களுக்கு அளிக்கலாம். இது மீன்களுக்கு புரதச் சத்து நிறைந்த உணவு. இவற்றை வேகவைத்தும் கொடுக்கலாம். பட்டாணியை வேகவைத்து மீன்களுக்கு அளிக்கலாம். அது சரியான ஊட்டச்சத்துணவு.

    மீன் சதை துணுக்குகள்

    மீன்களின் சதை துணுக்குகளை சில மீன்கள் சாப்பிடும். இதனால் மீன்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.

    Previous Next

    نموذج الاتصال