அனைவரையும் தன் அழகான துள்ளி... துள்ளி... ஓடும் ஓட்டத்தால் கவர்ந்த முயலை, எல்லாருமே தன்னோட செல்லப்பிராணியா வளர்க்க ஆசைபடுவாங்க. ஏன்னா இது பார்க்க ரொம்ப அழகாக இருக்கும். இதோட ஸ்பெஷல் அதன் பற்கள் தான். இந்த முயலை வளர்ப்பதற்கு முன் இதைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய அழகான முயலை நம் செல்லமாக வளர்க்க நாம் சிலவற்றை ‘ஃபாலோ‘ பண்ணணும். அது என்னென்ன-னு பார்க்கலாமா!!!
முயலை வளர்க்க இதோ சில டிப்ஸ்...
1. முயலுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும், நாம் அதனுடன் பழக பழக தான் அது நம்ம கிட்ட நெருக்கமாகும். முயலை அடிக்கடி வெளியில் கூப்பிட்டு போக வேண்டும்.
2. முயலை சரியான இடத்தில் வளர்க்க வேண்டும். முயலை கூண்டுல வெக்கும் போது முயலைச் சுற்றி கொஞ்சம் இடம் இருக்கணும். ஏன்னா அது ஓடி விளையாட இடம் இருந்தா தான் அது சந்தோஷமா இருக்கும்.
3. முயலுக்கு அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளை கொடுக்கணும். நல்ல ஃப்ரஸ்-ஆ இருக்குற காய்கறிகளை தர வேண்டும். ஆனால் அதுக்கு சில காய்கறிகளை தரக்கூடாது. தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றைத் தரக்கூடாது. மேலும் சாக்லேட், பிஸ்கட் போன்றவற்றையும் தரக்கூடாது.
4. முயலுக்கு மெல்லும் பழக்கம் உள்ளது. அதனால் அதனிடம் மெல்லுவதற்கு ஏற்ற ஒரு சில விளையாட்டு பொருட்களை மட்டுமே கொடுக்க வேண்டும்.
5. முயலானது 12 மணிநேரம் சாப்பிடாமல் இருந்தால், அதற்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது என்று புரிந்து அதை உடனே கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.
6. நமது செல்லப்பிராணி ஆரோக்கியமா இருக்கணும்-னா அதை ரெகுலர் செக்கப் கூப்பிட்டு போகணும். இதனால நாம அதுக்கு எந்த நோயும் வராமல் தடுக்கலாம்.
7. முயலுக்கு சரியான பராமரிப்பு இருக்கணும். அப்படி சரியான பராமரிப்பு இல்லைன்னா, அது நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியாது.
அதனால அந்த அழகான முயலை ஆரோக்கியமா பாதுகாத்து வளர்த்து, அதோடு விளையாடி மகிழ்வோம்...